வேரில் வாழும் ஆசை

வேரினை மண்ணில் மறைத்து
வெளியெங்கும் பரவும்
செடியைப் போன்று
பொறுமையாய் வளர்கிறது எனதாசை.

மழை கொஞ்சும் தருணங்களில்
தன்னை மெருகேற்றிக் கொள்கிறது.
கிளைகள் முறியும் தருணங்களில்
கார்,கூதிர் என்றவாறு தேற்றிக்கொள்கிறது.

எதிர்பாரா ஒரு கணத்தில்
வேரில் வெந்நீர் வீழ்கையில்
காற்றில் விதைகளைத் தூவி
மௌனமாய் மரிக்கிறது.