புன்னகையின் நதியோட்டம்

என் வாழ்க்கையின்
வழி நெடுக ஓடிக்கொண்டிருக்கும்
புன்னகையின் நதியோட்டம் நீ.

நான் பூக்களை எறிந்தாலும்
முட்களைச் சொரிந்தாலும்
புன்னகைத்தே செல்கிறாய்.

நதியோடு கரையோரம்
மணலாடி நதி வியக்கும்
குழந்தை போல் நான்.

2 comments:

k s said...

நதியோடு கரையோரம்
மணலாடி நதி வியக்கும்
குழந்தை போல் நான்.

ithan ul artham enna endru teriya vittalum.. nalla iruku..
good work. MOO RAy..

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

நதிக்கரையில் குழந்தைகள் மணலில் ஆடிக்கொண்டு இருக்கும்.திடீரென்று, கையில் கிடைத்ததை நதியில் வீசிவிடும்.இன்னும் சில நேரங்களில், நதியை ஆவென்று பார்த்துக்கொண்டு இருக்கும். குழந்தைகள் உணர்வுகள் எல்லாம் (duality) அந்த நொடியில் மட்டுமே. அதைத் தான் சொல்ல வந்தேன்.

வாசிப்பிற்கு நன்றி செந்தில்.